Search This Blog

Friday, October 31, 2008

கீதையின் பின் புழம்

கீதைதோன்றிய பின் புழம் :


பாண்டவர்கள் ௧௨ ( பன்னிரண்டு) ஆண்டுகள் காட்டிலும் ஓர் ஆண்டு நாட்டிலும் இருந்து மீண்டும் தங்களுடைய அரசை ஆள கேட்டபோது திரியோதனர்கள் தர மறுக்க , கண்ணன் உதவியுடன் பாரதப்போர் துவங்குகிறது. கண்ணன் தன் படைகளை திரியோதனனுக்கு கொடுத்தும் தான் பாண்டவர்கள் பக்கமும் இருந்து போர்புரிய உதவினார்.


போருக்கென்ற சில விதிமுறைகளை அக்காலத்தில் கடைபிடித்தனர். இரண்டு பக்கமும் போர் அறிவிப்பு (கொடி அசைத்தல்) செய்தபின்தான் போர் தொடங்கும். அந்த இடைப்பட்ட நேரத்தில்தான் கிருஷ்ணன் ஆசிரியராகவும் அர்ச்சுனன் மாணவனாகவும் இருந்து உரையாடுகின்றனர்.


அர்ச்சுனனுக்கு போரில் ஈடுபட மனம் வரவில்லை. அப்பொழுது கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு போரின் அவசியத்தைக் கூறி ,போர் புரியச்சொல்கிறார்.
தர்மர் போர்களத்தில் நுழைந்தவுடன், தேரைவிட்டு இறங்கி எதிரி படைகளின் ஊடே நடந்துசென்று பீஷ்மரை வணங்கி அவரிடம் ஆசிபெறுகிறார். பீஷ்மர் தர்மர் வெற்றிபெற ஆசிர்வதிக்கிறார். அப்பொழுது உங்களை யாரும் வெற்றிபெற முடியாதபோது நான் எப்படி வெற்றிபெற முடியும் என தர்மர் கேட்கிறார். அதற்கான நேரம் வரும்பொழுது உனக்கு தெரியும் என்கிறார். பிறகுதான் போர் தொடங்குகிறது.

போர்க்களத்தில் அர்ச்சுனனுக்கு கிருஷ்ணன் அளித்த விளக்கம்தான் கீதை. போர் நடந்த இடம் குருஷேத்திரம்.
குருஷேத்திரம்

No comments:

Post a Comment